×

போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி பார் ஊழியர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி வழக்கு

மதுரை, மே 10: போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறி, பார் ஊழியர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரிய வழக்கில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மாங்குட்டிபட்டியை சேர்ந்த உமாபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் வெங்கடேசன், வடகாடு அரசு மதுபான பாரில் ஊழியராக பணியாற்றினார். கடந்த 1ம் தேதி ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் வீட்டிற்கு வந்து என் கணவரை சட்ட விரோதமாக அடித்து இழுத்துச் சென்று ஒரு வழக்கில் கைது செய்தனர். கடந்த 4ம் தேதி எனது கணவரின் உடல்நிலை பாதித்தாக கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தெரிவித்தனர். நான் சென்று பார்த்தபோது என் கணவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார். மறுநாள் என் கணவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சட்டவிரோதமாக அழைத்து சென்று தாக்கியதால் தான் இறந்துள்ளார். இதற்கு காரணமான ேபாலீசார் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறும், என் கணவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுவிற்கு புதுக்கோட்டை எஸ்பி, மாவட்ட மருத்துவக்கல்லூரி டீன் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி பார் ஊழியர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி வழக்கு appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Umabharathi ,Manguttipatti ,Alangudi, Pudukottai district ,I-Court ,
× RELATED சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும்...